இரவு முழுவதும் நின்று வணங்க சொன்னதற்கு மாறாக, இரவு முழுவதும் விழித்திருந்து வீண் விளையாட்டுகளிலும், வாகனங்களில் உலா வந்தும் வீணாக கழித்து பகல் பொழுதை தூக்கத்தில் கழிக்கும் சிலர்.
அவ்வாறு வீணாக கழிக்காமல் குர்ஆன் ஓதி அல்லது கற்று அல்லது இறைவனை நின்று வணங்கி(தொழுது) கழித்தால் நன்மையை அடையலாமே,
குர்ஆன்:
இரவில் (உனது நெறிநூலாகிய) என்னை ஓதுவதன் மூலம் அவரை நான் தூக்கத் திலிருந்து தடுத்து வைத்திருந்தேன். எனவே எனது பரிந்துரையை ஏற்பாயாக! எனப் பிரார்த்தனை செய்யும். இப்பரிந்துரைகள் அல்லாஹ்வால் அங்கீகரிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்படும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர்(ரழி)
ஆதாரம்: முஸ்னத் அஹ்மத், பைஹகீ
‘ரமழானின் ஒவ்வொரு இரவிலும் ஜிப்ரீல்(அலை) நபி (ஸல்) அவர்களை சந்தித்து அல்குர்ஆனை ஓதிக்காட்டுவார்கள்’ – புஹாரி
‘ஆதமுடைய மகனின் ஒவ்வொரு அமலுக்கும் (செயலுக்கும்) பத்திலிருந்து எழு நூறு மடங்கு வரை கூலி பெருக்கி கொடுக்கப்படுகிறது நோன்பைத் தவிர. நிச்சயமாக அது எனக்குரியதாகும், நானே அதற்கு கூலி வழங்குவேன்’ என அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முத்தபகுன் அலைஹி).
‘அல்லாஹ்வின் வேதத்தில் ஒரு எழுத்தை ஒருவர் ஓதினால், அவருக்கு பத்து நன்மைகள் அதற்காக வழங்கப்படும்.’ (திர்மிதி, தாரமி).
அல்லாஹ் தனது திருமறையில் இறை விசுவாசிகளின், இறை நல்லடியார்களின் உயரிய பண்புகளை பற்றி குறிப்பிடும் போது:
‘இன்னும், அவர்கள் வீணான (பேச்சு, செயல் ஆகிய)வற்றை விட்டு விலகியிருப்பார்கள்.’ (23: 3).
நன்றி: நன்னெறி முகநூல்,Smart Pno Thamim
Leave A Comment